பல ஆண்களுடன் தொடர்பு கண்டித்த கணவனை சைலண்டா தீர்த்து கட்டிய மனைவி.. 4 மாதங்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!

314

சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57வது தெருவை சேர்ந்தவர் கவுஷா பாஷா (48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவுஷா பாஷா நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி ஷாஜிதா பானு தெரிவித்துள்ளார்.

இதனிடையே கவுஷா பாஷா உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் கவுஷா பாஷா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது மனைவி ஷாஜிதா பானுவிடம் போலீஸார் ரகசிய விசாரணை நடத்தியபோது, ​​பகீர் தகவல் வெளியானது. சில மாதங்களுக்கு முன், ஷாஜிதா பானு பாலியல் வழக்கில் கைதாகி சிறை சென்றார். மேலும் அவருக்கு பல விபச்சார உறவுகள் இருந்துள்ளன.


விஷயம் அறிந்த கணவர் கவுஷா பாஷா, அவரது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஷாஜிதா பானு, கணவர் என்று கூட பார்க்காமல் துப்பட்டாவால் கழுத்தை நெரித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி கணவரை கொலை செய்த ஷாஜிதா பானுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.