கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவி திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கோட்டயம் கரைப்புதட்டைச் சேர்ந்த லால் சி லூயிஸ் என்பவரின் 12 வயதுடைய மகள் கிறிஸ்டல் சி லால், கிரிஸ்டல் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற போது, மாணவி கீழே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கிறிஸ்டலுக்கு வென்டிலேட்டர் ஆதரவில் சிகிச்சை தரப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி கிரிஸ்டல் உயிரிழந்தார்.