பாவாடை தாவணியில் அத மூடாமல் கிளாமர் காட்டிய பூஜா ஹெக்டே!!

291

பூஜா ஹெக்டே..

கர்நாடகா பூர்வீகம் என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட முயற்சிகள் செய்தார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வந்தது.

அப்படி அவர் நடித்த படம்தான் முகமூடி. மிஷ்கின் இயக்கிய இந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே, தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை. அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போனார். தெலுங்கு சினிமா அவருக்கு கை கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தெலுங்கில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ஒருகட்டத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறி மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அல்லு அர்ஜூன் என பலருடனும் நடித்தார். இப்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக மும்பையிலேயே தங்கி வாய்ப்பு தேடி வருகிறார். ஒருவழியாக சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்தார்.


தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார். அதற்காக விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகை தன்பக்கம் திருப்ப முயற்சி செய்து வருகிறார். அந்தவகையில், பாவாடை தாவணியில் அழகை காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.