பிரித்தானியாவில் வேலையிழந்த இளைஞருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

732

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து கஷ்டப்பட்ட இளைஞருக்கு பிரித்தானியாவில் நடந்த gaming contestல் லம்போர்கினி கார் பரிசாக விழுந்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் ஷிபு பவுல், இங்கிலாந்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவருக்கு கொரோனாவால் வேலை பறிபோனது. இவரது மனைவி Lynette, மருத்துவ தாதியாக பணியாற்றிவரும் இவர் பொழுதுபோக்காக ஓன்லைன் கேம் விளையாடியுள்ளார்.

1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட Best of the Best என்ற நிறுவனத்தின் ஓன்லைன் கேமிலேயே இவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. முதலில் இரண்டு முறை தோற்றாலும், மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் ஷிபு தம்பதியினர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

தங்கள் வீட்டில் வாசலில் லம்போர்கினி காரை பார்த்தும் பேச்சே வரவில்லை என்கிறார் ஷிபு. மேலும் ஒரு வருட இன்சூரன்ஸ் மற்றும் பெட்ரோல் செலவும் இலவசமாம், இதுதவிர 20,000 பவுண்ட்ஸ்கள் பணமும் கிடைத்துள்ளதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.