பிரித்தானிய இளவரசர் சார்லஸ் முன்பு சுருண்டு விழுந்த நபரால் பரபரப்பு!!

656

இளவரசர் சார்லஸ் உடன் உரையாடிக் கொண்டிருந்த ஆஸ்டா ஊழியர் ஒருவர் திடீரென்று திகைப்பில் மயக்கமுற்று சரிந்த சம்பவம் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளவரசர் சார்லஸ் பிரிஸ்டலில் உள்ள ஆஸ்டா விநியோக மையத்திற்கு வெளியே இருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திகைப்பில் அந்த நபர் தடுமாறத் தொடங்கினார்.

அடுத்த சில நொடிகளில் அந்த நபர் திகைத்துப்போன சார்லஸுக்கு முன்னால் மயக்கம் வருவது போல் தரையில் சுருண்டு விழுந்துள்ளார். ஆனால் திடுக்கிட்ட இளவரசர் சார்லஸ் அந்த நபரை காப்பாற்றும் நோக்கில் அவரை நெருங்கினார். உடனே சுதாரித்துக் கொண்ட ஆஸ்டா ஊழியர்கள் வியப்பில் மயக்கமுற்று சரிந்த நபருக்கு உதவ முன்வந்துள்ளனர்.

மயக்கம் தெளிந்த அந்த நபர் பின்னர் இளவரசருடன் உரையாடியுள்ளார். இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் விநியோக மையத்திற்கு வருகை தந்திருந்தார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உழைத்துவரும் ஆஸ்டா ஊழியர்களை இளவரசர் சார்லஸ் தம்பதி பாராட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here