பிரியங்காவின் விவாகரத்து குறித்து தாய் உடைத்த உண்மை… அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

94

பிரியங்கா…

பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் தான் பிரியங்கா. இவர் சமீபத்தில் கூட நடந்துமுடிந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பல ஆண்டுகளாக தனது சுட்டித்தனமான பேச்சியினால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், மக்களையும் அதிகமாக கவர்ந்து வருகின்றார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பிரவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்க அவரை விட்டு பிரிந்து வாழ்கின்றார். ஆனால் இதனை அவர் எந்த நிகழ்விலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதுகுறித்து தற்போது வரை வாய் திறக்காமல் இருந்து வருகின்றார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட தனது தம்பி மற்றும் அம்மாவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்த அவர் தனது கணவர் குறித்து எந்தவொரு வார்த்தையினையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் பிரியங்கா மற்றும் அவரது அம்மா இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அவரது தாய், மகள் பிரியங்காவின் திருமண வாழ்க்கை பற்றி பேசியுள்ளார்.

பிரியங்கா முந்தைய வாழ்க்கையில் செய்த தவறு போல இனி செய்யக்கூடாது. அவர் சரியான ஒன்றை தேர்வு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவரது தாய் கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.