புருஷனை கொன்று விட்டு, மது விருந்து வைத்து தோழிகளுடன் கொண்டாடிய மனைவி.. போலீசாரின் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

355

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வசித்து வந்தவர் எரிக் ரிச்சின்ஸ். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் 4-ம் தேதி தனது வீட்டில் எரிக்இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். எரிக் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த வருட காதலர் தினத்தன்று தனது கணவருக்கு கவுரி வோட்கா கலந்து கொடுத்துள்ளார். அதனைக் குடித்து பின்னர் எரிக் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும், இறக்காத நிலையில், கடந்த மார்ச் 4ம் தேதி, தனது கனவர் மயக்கமடைந்து விழுந்து கிடப்பதாக பதறியடித்தபடி கவுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்த போது உயிரிழந்த எரிக்கின் உடலைப் பார்த்தனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

திட்டமிட்டு, கவுரி கொலைச் செய்ததாக சந்தேகமடைந்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினார்கள். போலீசாரின் விசாரணையில், கடந்த பிப்ரவரி காதலர் தினத்திற்கு முன்பு சிலருக்கு செல்போனில், வலி நிவாரண மருந்து அனுப்பும் படி கவுரி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

ஹைடிரோ கோடோன் மருந்துகளையும் வாங்கி உள்ளார். அதன் பின்னர், இதனை விட சற்று வலுவான மருந்துகள் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். மூன்று தினங்களுக்குப் பின்னர், அவர் விரும்பிய மருந்துகள் அவருக்கு கிடைத்து உள்ளன.

அதன் பின்னர், கணவருடன் சேர்ந்து காதலர் தினம் கொண்டாடி, அவரை வோட்கா அருந்தும் படி கட்டாயப்படுத்தி உள்ளார். இரவு உணவுக்கு பின்னர் எரிக் உடல்நலம் பாதிக்கப்பட்ட போதும், உயிர் தப்பிய நிலையில், தனது முயற்சியில் மனம் தளராத வேதாளமாக பென்டனைல் எனப்படும் மருந்துகளை கூடுதலாக கவுரி வாங்கியுள்ளார். இந்த முறை அதனை கலந்து கொடுத்ததில் எரிக் உயிரிழந்து உள்ளார். கணவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.

கணவர் இறந்த அடுத்த நாளே, தனது தோழிகளை அழைத்து மது, உணவு என விருந்து வைத்து கொண்டாடி உள்ளார். இந்த சம்பவத்தில் கவுரி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட மருந்து பொருட்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டும் அவர் மீது பதிவாகி உள்ளது.

மேலும் அதிர்ச்சியான விஷயமாக கணவர் மரணமடைந்து ஓராண்டுக்கு பின்பு, குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை கவுரி வெளியிட்டார். என்னுடன் நீங்கள் இருக்கிறீர்களா? என்ற தலைப்பு கொண்ட அந்த புத்தகம் அமேசானில் விற்பனைக்கு வந்தது.

அதற்கான விவர குறிப்பில், அன்புக்குரிய ஒருவரை இழந்த கடினம் வாய்ந்த அனுபவ சூழலிலும், இந்த புத்தகம் குழந்தைகளுக்கு மென்மையான முறையில் வழிகாட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.