சென்னையில்..
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உறவினரின் திருமணத்திற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு குடும்பத்துடன் தங்கிருந்தார். இந்நிலையில், திருமண மண்டபத்தில் பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது,
ஜன்னல் வழியாக, இருவர் செல்போனில் வளைச்சு வளைச்சு வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து தப்பிக்க முயன்ற இருவரையும் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களை இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராணிப்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் (20) என்பதும், மற்றொரு நபர் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இருவரும் மண்டபத்தில் சமையல் வேலைக்கு உதவியாக வந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களது செல்போனை வாங்கி பார்த்த போது, இருவரும் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தது உறுதியானதை அடுத்து பச்சையப்பன் புழல் சிறையிலும், சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.