பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. தப்பிக்க காதலனுடன் சென்ற போது நேர்ந்த கொடூரம்!!

172

10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், அந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததன் பேரில் 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னையைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காணவில்லை என அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, ​​செங்கல்பட்டில் உள்ள பெண்ணின் காதலன் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிறுமியை மீட்டு காதலனை கைது செய்தனர்.

மேலும் காதலனின் நண்பரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததும், அவரும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

பல ஆண்டுகளாக தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தினார், மேலும் அவரது தந்தையையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பெற்ற தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததால் காதலிப்பதாக கூறி காதலனுடன் சிறுமி வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.