பெற்ற மகளை தூங்கிய போது கிணற்றில் வீசிய தாய்!!

203

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியில் வசித்து வருபவர் முத்தையா. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இந்த தம்பதியினருக்கு பூவரசி என்ற 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.

திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. அதனால், கடந்த 3 வருடங்களாகவே, இருவரும் தனித்தனியே பிரிந்து அவரவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்கள்.

சினேகாவுக்கு சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும் சரத்குமார் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த விவகாரம் சினேகாவின் வீட்டுக்கு தெரியவந்துள்ளது. எனவே, சினேகாவை குடும்பத்தினர் கண்டித்தனர். 4 வயது குழந்தையை வைத்துக் கொண்டு, இப்படி தவறான உறவில் ஈடுபட கூடாது என பெற்றோர் அறிவுறுத்தினர்.

இதனால், கோபமடைந்த சினேகா குழந்தையை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்கு அவருடைய பெரியப்பா மகள் கோகிலாவையும் கூட்டு சேர்த்துக் கொண்டார்.


சம்பவத்தன்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு போய், அந்த பகுதியிலிருந்த தோட்டத்தில் கிணற்றில் வீசியெறிந்தனர்.

குழந்தை கிணற்றிலேயே மூழ்கி உயிரிழந்தது. மறுநாள் கிணற்றில் குழந்தையின் உடல் மிதந்ததைகண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போது சினேகா மாயமாகி விட்டார். தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு தப்பியோடிய சினேகா, கோகிலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.