பேரிச்சம்…
பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.
பேரீச்சம்பழம் நன்மை செய்யக்கூடியவை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது பல விளைவுகளை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு.
அந்தவகையில் பேரீச்சையை அதிகமாக எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
- பேரீச்சம்பழத்தை உலர வைக்கப்படும் போது அதில் பாக்டீரியாக்கள் சேராமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயன கலவைகளில் சல்பைட்டுகளும் ஒன்று. இதனால் வயிறு வலி, வாயு வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சில எதிர்விளைவுகள் பாதிக்கப்படலாம்.
- அதிக அளவு பேரீச்சம்பழம் எடுத்துகொள்வது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்பிரச்சனைக்கு வழிவகுக்க செய்யும்.
- பேரீச்சம்பழம் அதிக அளவு எடுத்துகொள்ளும் போது ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை உண்டாக்க வாய்ப்புண்டு என்பதால் இது குறித்து ஏற்கனவே அவதிப்படுபவரக்ள் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
- பேரீச்சை நார்ச்சத்து அதிகம் உள்ளவை. இது கலோரிகளாலும் நிரம்பபட்டுள்ளது. இதனால் இது எடை அதிகரிப்புக்கு பங்களிக்க வாய்ப்புண்டு. ஒரு கிராம் பேரிச்சையில் 2. 8 கலோரிகள் கொண்டுள்ளது. இவை எடை அதிகரிப்பை ஊக்குவிக்க செய்யும். அதிகமாக பேரீச்சை சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
- பேரீச்சம்பழம் உலர்ந்தவற்றில் சரும வெடிப்புகளை உண்டாக்க கூடிய சல்பைட் இருக்கலாம். இதனால் இவை சருமத்தில் தடிப்புகளை உண்டாக்கவாய்ப்புண்டு.
- பேரீச்சம்பழம் இனிப்பு சுவையை கொண்டிருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த அளவில் சர்க்கரை அளவு பாதிப்பை உண்டாக்கும்.
- பேரிச்சை ஃப்ரக்டோஸை கொண்டுள்ளது. இது இயற்கையான இனிப்பை கொண்டிருந்தாலும் சிலருக்கு பிரக்டோஸ் சகிப்புத்தன்மை இருக்கும். இதனால் ஜீரணிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இது பிரக்டோஸ் சகிப்பின்மை எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும்.
- பொதுவாக பெட்ரோலிய மெழுகு அல்லது கெமிக்கல் கலந்த ஸ்ப்ரேக்களின் மூலம் பளபளப்பான பேரீச்சை கடுமையான செரிமான பிரச்சனைகளை உண்டாக்க செய்யும்.
- பேரீச்சையில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கும் நிலை ஹைபர் கேமியா. இதை அதிகமாக எடுத்துகொள்ளும் போது பொட்டாசியம் அளவு அதிகரிக்கும். ஏற்கனவே உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாக இருப்பவர்கள் அதிக அளவு பேரீச்சை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.