பொன்னியின் செல்வன் பார்க்க சென்ற இளம்பெண் திடீரென எடுத்த விபரீத முடிவு!!

33544

சென்னையில்..

சென்னை பொழிச்சலூர் கமிஷனர் காலனியில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 33 வயது ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் ஐஸ்வரியா சென்னையில் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மருத்துவரிடம் சிகிச்சையும், மன நல ஆலோசகரிடம் ஆலோசனையும் பெற்று வந்தார். பொன்னியின் செல்வன் 2 படம் வெளியான நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க 2 குழந்தைகளை அழைத்து சென்றார்.

தன் இரு குழந்தைகளிடம் பாத்ரூம் சென்று விட்டு வருவதாக கூறி விட்டு தியேட்டரை விட்டு வெளியே சென்றார். விறுவிறுவென உள்நாட்டு முனையம் வழியாக பன்னடுக்கு கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றார். அங்கு 4வது மாடிக்கு ஏறியவர் திடீரென கார் பார்க்கிங்கின் 4வது தளத்தில் இருந்து,

ஐஸ்வர்யா கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து விட்டார். அதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here