பிரியங்கா மோகன்….
லட்சணமான முக ஜாடையுன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய நாட்களிலேயே பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழ் கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆனால், அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் பிரியங்கா மோகன் அடையாளம் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அப்படத்தை தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
தற்போது, இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வேல்மதி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அடுத்தடுத்து யாருடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு நீண்ட பதிலை அளித்திருக்கிறார். அதில் தமிழில் இன்னும் கார்த்திக் சார், தளபதி விஜய், ரஜினி சார் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நடிக்க ரெடி. பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்ற தெலுங்கு நடிகர்களுடன் நடிக்க வேண்டும். கன்னடாவில், யஷ், ரக்ஷித் ரெட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். மலையாளத்தில், பகத் பாசில், துல்கர் சல்மான் போன்ற நடிகர்களுடன் நடிக்க ஆசை என்று பிரியங்கா மோகன் தெரிவிக்க இதனை பார்த்த ரசிகர்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Enna.. List Neelama poite iruke…..
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 17, 2024