செங்கல்பட்டு….
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்தவெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மணிகண்டன், 23; கூலி தொழிலாளி.இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 10ம் தேதி மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன், வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வைத்திருந்த ‘டர்பன்’ ஆயில் எனும் திரவத்தை தவறுதலாக குடித்துள்ளார்.
இதையடுத்து, இவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.