மனைவிக்கு திருமணத்தை மீறிய தகாத உறவு: 2 மகன்களை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை முயற்சி!!

791

தமிழகத்தில் மனைவியின் தகாத பழக்கத்தில் மகன்கள் இருவரையும் கொன்றுவிட்டு கணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியை சேர்ந்த தம்பதியினர் குமார்- உஷா ராணி, குமார் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் உஷாராணி அப்பகுதியில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு கோப்பெருஞ்சோழன்(வயது 8), சித்தார்த்தன்(வயது 6) என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் உஷாராணிக்கும், அதேபகுதியில் பணியாற்றி வரும் கனகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இதைப் பற்றி அறிந்ததும் குமார் இருவரையும் கண்டித்துள்ளார், ஆனால் கணவனின் எச்சரிக்கையையும் மீறி உஷாராணி கனகராசுவுடன் பழகி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குமார், கனகராஜை கொலை செய்ய திட்டமிட்டார், முதல் வேலையாக தனது திருமண ஆல்பம் மற்றும் குடும்ப போட்டோக்களில் மனைவியின் முகத்தை கத்தியால் கீறி அழித்துள்ளார்.

பின்னர் நேற்று காலை 8 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்திற்கு அரிவாளுடன் சென்ற குமார், அங்கு நின்றிருந்த கனகராஜின் கழுத்தை குறிவைத்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

கனகராஜ் தனது கையால் தடுத்ததில் அரிவாள் வெட்டு அவரது கையில் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கனகராஜ் கீழே விழ, குமார் தப்பியோடி தலைமறைவானார்.அங்கிருந்தவர்கள் உடனடியாக கனகராஜை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து பொலிசாரும் உறவினர்களும் குமாரைத் தேடிய நிலையில் அவரும் அவரது மகன்கள் இருவரும் மாயமாகியிருந்தனர்.

இந்த நிலையி்ல் பிற்பகல் 1 மணியளவில், பாலமேட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளையம்பட்டி பெரியகுளம் மாடக் கருப்பு கோவிலில், குமார், தனது இரு மகன்களுடன் குருணை மருந்து அருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.