மனைவிக்கு பேய் இருப்பதாக மந்திரவாதியிடம் சென்ற தம்பதி.. பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்!

817

உத்திரபிரதேச மாநிலம் பெருநகர நொய்டாவில் இளம் வயது தம்பதிகள் வசித்து வருகின்றனர். கடந்த மாதங்களுக்கு முன் திருமணமாகி தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த நிலையில், பெண்ணின் கணவருக்கு திருமணமான பின் ஏதோ சில சிக்கல்களை எதிர்கொண்டதாக உணர்ந்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளைஞருக்கு அவரது மனைவி சில நேரங்களில் மனைவியை ஏதோ தாக்குவதாகவும், சில விவரிக்க முடியாத விஷயங்கள் அவர்களின் வீட்டில் நடக்க ஆரம்பித்துள்ளன.

இதனால், தன் மனைவிக்கு தான் ஏதோ ஆவி இருப்பதாக உணர்ந்த அவர், அதனை ஒழிக்க மந்திரவாதிகளின் உதவியை நாடியுள்ளார்.

இதையடுத்து, மனைவிக்கு பிடித்து இருக்கும் ஆவியை விரட்ட மந்திரவாதியின் ஊருக்கு தன் மனைவியுடன், 5000 ரூபாயையும் எடுத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கணவன் மனைவி இருக்கும், அந்த மந்திரவாதி ஏதோ மந்திரப்பொடி போல் ஒன்றை கொடுத்து சாப்பிட சொல்லியதற்கு எந்தவித கேள்வியும் கேட்காமல் கணவன் மனைவி இருவரும் அதனை சாப்பிட்டு மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மந்திரவாதி திருமணமான 20 பெண்ணை மயக்க நிலையிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

மேலும் மயக்கம் தெளிந்து சுயநினைவு அடைந்ததும், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உணர்ந்த அந்தப் பெண், அதைப் பற்றி தனது கணவரிடம் கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவரை வெளியே சொன்னால் கொன்னுவிடுவதாகவும் மந்திரவாதியின் அடியாட்களை வைத்து மிரட்டியுள்ளான்.

ஆனாலும், தன் மனைவிக்கு நிகழ்ந்த கொடுமையை கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர்.

கணவரின் புகாரின் அடிப்படையில், போலீசார் ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் 504 (அமைதி மீறலைத் தூண்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மந்திரவாதி மற்றும் அவரின் அடியாட்களை பிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here