மனைவியிடமே மருமகளை படுக்கைக்கு அனுப்புமாறு கேட்ட மாமனார் : இறுதியில் நடந்த சோகம்!!

50470

உத்தரப்பிரதேசம்…..

உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜேந்திர சிங்(43). இவரது மனைவி மித்லேஷ்(40). இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள். இந்நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி வீட்டு வாசலில் தேஜேந்திர சிங் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தேஜேந்திர சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போது மர்ம நபர்கள் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டதாக கூறி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

பின்னர், போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- தினமும் கணவர் குடித்துவிட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்தியது இல்லாமல் 19 வயது மருமகளை தன்னுடன் படுக்கை அனுப்பி வைக்குமாறு டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீது மித்லேஷ் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட்14-ம் தேதி அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்த தேஜேந்திர சிங், வீட்டு வாசலில் உறங்கிய கொண்டிருந்த போது ஆத்திரத்தில் இருந்த மித்லேஷ் அரிவாளால் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, மித்லேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவரை மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.