மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த விவசாயி.. திட்டமிட்டு கணவன் செய்த கொடூரம்!!

185

நாமக்கல்லில்..

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலப்பள்ளிப்பட்டியை அடுத்த வைரபாலிக்காட்டை சேர்ந்தவர் மாரப்பன் மகன் ரவி(55). விவசாயி. கடந்த, 20 வருடங்களுக்கு முன்பே மனைவி இறந்துவிட்டார்.

தனது ஒரே மகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து மனைவி வசந்தா, (45). வசந்தாவுக்கும் ரவிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அல்லி முத்துவுக்கும் ரவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு கள்ளத்தொடர்பை கைவிடும்படி மனைவி வசந்தாவிடம் அல்லிமுத்து தகராறில் ஈடுபட்ட நிலையில், வசந்தா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி வசந்தாவை சமாதானப்படுத்தி அல்லிமுத்து வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 அளவில் அல்லிமுத்து வீட்டில் இல்லை என நினைத்து வசந்தாவை சந்திக்க ரவி சென்றுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஆனால் அல்லிமுத்து வீட்டின் பின்புறம் மறைந்து இருந்துள்ளார். வீட்டிற்கு வந்த ரவிக்கும் அல்லிமுத்துவிற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமதானப்படுத்தினர்.

ஆனால் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரவியின் நெஞ்சு பகுதியில் சுட்டு விட்டு அல்லிமுத்து அங்கிருந்து துப்பாக்கியுடன் தப்பி ஓடியாதாக கூறப்படுகிறது. அல்லிமுத்து தப்பியோடிய நிலையில் அவரது மனைவி வசந்தாவும் தலைமறைவு ஆனார்.

தகவலறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரவி இறந்த கிடந்த இடத்தில் இரத்த கறைகளுடன் கத்தியும் இருந்ததால் கத்தியை வைத்து குத்தினாரா? அல்லது துப்பாக்கியில் சுட்டு கொலை செய்தாரா? என்பது குறித்து முழு விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என நாமகிரிப்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி அல்லிமுத்து ஊட்டி,ஏற்காடு போன்ற பகுதிகளில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து கடந்த 20 வருடங்களாக பணி செய்து வந்த நிலையில் சொந்த ஊருக்கே வந்து கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வீடு கட்டி குடி வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே அவரிடம் இருந்தது கள்ளத்துப்பாக்கியா? அல்லது லைசன்ஸ் உடன் இருக்கும் துப்பாக்கியா? என்பது குறித்து முழு விசாரணை நடந்து வருகிறது.

கொலை குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளத்தொடர்பு பிரச்னையால்தான் இந்த கொலை நடந்திருக்கும் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய அல்லிமுத்துவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.