மனைவியுடன் கள்ளக்காதலன் உல்லாசம்.. கடுப்பான கணவர் : இறுதி நடந்த பயங்கரம்!!

36195

சென்னை….

சென்னை மயிலாப்பூர் நொச்சிநகர் புதிய அவுசிங் போர்டு 6-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பிரசன்னா(38). இவர் நேற்று இரவு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரசன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. மயிலாப்பூர் டுமிங்குப்பம் செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளார். இருப்பினும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலனின் கணவர் வீடு புகுந்து பிரசன்னாவை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.