மர்ம சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த கல்!.. பேரதிர்ச்சியில் மக்கள்..!

961

ராஜஸ்தானில் பாரிய சத்தத்துடன் விண்கல் ஒன்று விழுந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ராஜஸ்தானின் சஞ்சோர் பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலியுடன் அந்த பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

மேலும் அந்த இடத்தில் பாரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டதாகவும், அச்சத்தம் 2 கி.மீ சுற்றளவுக்கு கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக பொலிசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது, முதலில் வெப்பமாக இருந்த நிலையில் வெப்பம் தணிந்ததும் அதனை பொலிசார் எடுத்துச் சென்றுள்ளனர்.


அந்தப்பொருள் சுமார் 2.78 கிலோ எடை கொண்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள நகைக்கடைக்கு சொந்தமான ஆய்வகத்தில் செய்யப்பட்ட முதற்கட்ட சோதனையில் அந்த கல்லில் ஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல் மற்றும் இரும்பு அடங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அடுத்தக்கட்ட சோதனைக்காக அந்த பொருளை ஜெய்பூரில் உள்ள புவியியல் தொடர்பான ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.