மலையிலிருந்து ஒலித்த மர்மக்குரல்… டிராகன் சத்தமிடுவதாக எண்ணி வேட்டைக்கு புறப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!

837

சீன கிராமம் ஒன்றின் அருகிலுள்ள மலை ஒன்றிலிருந்து மர்மக்குரல் ஒன்று ஒலிக்க, அது டிராகனாக இருக்கலாம் என்று எண்ணி அதைப் பார்க்கத் திரண்டனர் ஆயிரக்கணக்கானோர்.

சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆன வீடியோ ஒன்றில், சீனாவிலுள்ள Xiushui என்ற பகுதியிலிருக்கும் மலை ஒன்றை நோக்கி ஆயிரக்கணக்கானோர் செல்வதைக் காணமுடிவதோடு, ஏதோ ஒரு விலங்கு எழுப்பும் சத்தத்தையும் தெளிவாக கேட்கமுடிகிறது.

அது ஒரு டிராகன் எழுப்பும் ஒலிபோல் உள்ளது என சிலர் கூற, அது என்ன என்று பார்ப்பதற்காக மக்கள் திரண்டனர்.

இதற்கிடையில், அரசு அதிகாரிகள், நிபுணர்கள் சிலரை அனுப்பி அது என்ன சத்தம் என்று கண்டறியுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அதன்படி அந்த மலைக்கு சென்ற விலங்கியலாளர்கள், அந்த ஒலியை எழுப்பிய உயிரினம் என்ன என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அது உண்மையில் ட்ராகன் அளவுள்ள விலங்கினம் எல்லாம் அல்ல, ஒரு சிறிய பறவை. Yellow-legged buttonquail எனப்படும் அந்த பறவைதான் இனப்பெருக்க நேரத்தில் அப்படி ஒரு சத்தம் எழுப்புவது தெரியவந்தது.

அதன் சத்தம் 328 அடி தூரம் கேட்கக்கூடியது. ட்ராகனைத் தேடி வந்த கிராம மக்கள், விலங்கியலாளர்கள் குறிப்பிட்ட பறவையைக் கண்ணால் பார்த்து உறுதி செய்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றுள்ளனர்.