மின் கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!

750

கம்புருபிட்டிய நகரில் பெண் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். குடும்ப தகராறு தொடர்பாக அந்த பெண் மின்சார கம்பத்தில் ஏறி ஒரு மணி நேரம் வரையில் இருந்ததாக கம்புருபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை கீழே இறக்குவதற்கான முயற்சியில் பெண் பொலிஸ் அதிகாரிகள் முயற்சி செய்த போதிலும் அது பயனற்றதாக இருந்தது.

இந்நிலையில், அந்த பகுதி மக்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து குறித்த பெண்ணை மின் கம்பத்திலிருந்து கீழே இறக்கியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் கம்புருபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here