மீண்டும் பரவும் Bubonic Plague நோய்? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சீனா!!

1028

இன்னர் (உள்) மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரில் Bubonic Plague நோய் உறுதிப்படுத்தியதை அடுத்து சீனாவில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.

அந்த மாநில அறிக்கையின்படி, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான நிலையில் இருக்கிறார் என சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நோய் தொற்றுடைய சந்தேகத்திற்கிடமான இரண்டாவது நபர் குறித்து விசாரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Bubonic Plague ஒரு காலத்தில் உலகின் மிகவும் ஆபத்தான நோயாக இருந்தது, எனினும், தற்போது அதற்கு எளிதாக சிகிச்சையளிக்க முடியும். இந்த நோய் தொற்றுக்குள்ளான முதலாம் நபர், பாயனூர் நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

நோயாளி எவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளானார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சந்தேகத்திற்கிடமான இரண்டாவது நபர் 15 வயது சிறுவன் எனவும், ஒரு நாய் வேட்டையாடிய மர்மோட்டுடன் தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பிளேக் நோயைக் கொண்டு செல்லக்கூடிய விலங்குகளை வேட்டையாடுவதையும், சாப்பிடுவதையும் தடைசெய்யும் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் குறித்து முறைப்பாடு செய்ய பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Bubonic Plague என்றால் என்ன?

14ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் சுமார் 50 மில்லியன் மக்களைக் கொன்ற பிளாக் டெத் – மனித வரலாற்றில் மிக மோசமான தொற்றுநோய்களில் ஒன்றான Bubonic Plague, பாக்டீரியா தொற்றுநோயால் ஏற்பட்டது.

1665ம் ஆண்டில் பெரும் பிளேக் காரணமாக லண்டனில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் சீனாவிலும், இந்தியாவிலும் 19ம் நூற்றாண்டில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

எனினும், தற்போது இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சையளிக்க முடியும். இந்த நோய் – பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பிளேஸால் பரவுகிறது – இது 30-60% இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. அதிக காய்ச்சல், சளி, குமட்டல், உடல் சோர்வு மற்றும் கழுத்தில் வீங்கிய நிணநீர், ஆகியவை பிளேக்கின் அறிகுறிகளாகும் என தெரிவிக்கப்படுகின்றது.