முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா?

1138

தலைமுடி உதிர்வது என்பது அனைவருக்கும் இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபடுதல், மற்றும் நாம் அன்றாட சாப்பிடும் உணவு முறை என்று நிறைய காரணங்கள் கூறி கொண்டே போகலாம்.

எல்லாருக்கும் தெரியும் அழகுத் துறையில் கற்றாழை ஜெல்லின் பயன் என்பது எல்லையில்லாதது. இது சருமத்திற்கு மட்டுமல்ல கூந்தலில் ஏற்படும் எண்ணிலடங்காத பிரச்சினைகளையும் களைகிறது.

இதிலுள்ள புரோட்டியோலைடிக் என்சைம் தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிப்படைந்த செல்களை நீக்கி முடி வளர்ச்சியை தூண்டுகிறது.


நல்ல அடர்த்தியாக கூந்தல் வளரவும் உறுதுணை செய்கிறது. கற்றாழை ஜெல்லில் இயற்கையாகவே 96% அளவு நீர்ச்சத்து உள்ளது. இதனால் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தையும் போஷாக்கையும் கொடுக்கிறது.

கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய்

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் அதிலும் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை ஒரு மேஜிக் பவர் என சொல்லலாம். தேங்காய் எண்ணெய் காலங்காலமாக கூந்தல் உதிர்தல், கூந்தல் வளர்ச்சி மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பயன்பட்டு வருகிறது.

வழுக்கை, இளநரை, கூந்தலுக்கு ஈரப்பதமும் கொடுக்கிறது. கற்றாழை ஜெல் ஒரு க்ளீன்சர் மாதிரி செயல்பட்டு கூந்தல் பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாக சரி செய்கிறது.

இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தலை தடுக்கிறது. சில நேரங்களில் நீங்கள் எண்ணெய் தேய்க்க விரும்பவில்லை என்றால் பாதிக்கப்பட்ட முடிகளில் மட்டும் ஆயிலை தடவி பிறகு சாம்பு கொண்டு அலசி விடுங்கள். பின்னர் இயற்கையாகவே கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.