மாளவிகா மோகனன்..
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளை செய்து வருபவர் மாளவிகா மோகனன். மலையாளத்தில் 4 படங்களும், ஹிந்தியில் ஒரு படமும் நடித்துவிட்டுதான் மாளவிகா தமிழுக்கு வந்தார்.
ஆனால், அதற்கு முன்பே தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தார். நல்ல உயரம், கச்சிதமான கட்டுடல், தூக்கலான அழகு என அம்மணியின் அழகில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவும் துவங்கியது.
அப்போதுதான் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் விஜயுடன் மாஸ்டர் படத்திலும், தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்தார். ஆனால், மாறன் படம் ஓடவில்லை. மாளவிகாவின் அக்மார்க் ஸ்டைல் கவர்ச்சியை எந்த திரைப்படத்திலும் காட்ட முடியவில்லை.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம் பாலிவுட் படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். விரைவில் பாலிவுட்டிலும் மாளவிகா வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் மாளவிகாவின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் கதாபாத்திரம் கிடைத்தது.
ஒருபக்கம், வழக்கம்போல் கவர்ச்சி உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மாளவிகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களின் ஹார்ட்பீட்டை எகிற வைத்துள்ளது.