ஹரிஜா….
யூடியூப் குறும்படங்களின் மூலம் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் ஹரிஜா. இவர் எரும சாணி என்ற சேனலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
குறிப்பாக யங்ஸ்டர்ஸ் மத்தியில் ஹரிஜா – விஜய் ஜோடி படு பேமஸ். கேரளாவைச் சேர்ந்த இவர், கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது தான் விஜயுடன் சேர்ந்து எரும சாணி சேனலில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் இருந்தே இவர்களின் வீடியோக்கள் மிகவும் வைரலானது. இதனால் மிகக்குறுகிய காலத்திலேயே ஹரிஜாவுக்கு சில சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்தார். ‘100’ , Mr.லோக்கல் உள்ளிட்ட படங்களில் ஹாரிஜாவின் ரோல் பேசும்படியாக அமைந்தது. யூடியூப்பில் பீக்கில் இருந்தபோதே தனது கல்லூரி சீனியர் அமர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகும் ஒல்லி அழகை மெயின்டைன் செய்து வரும் ஹரிஜா அவ்வப்போது தனது நடன வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மொட்டை மாடியில் ” சோனியா… சோனியா” பாடலுக்கு செம பெர்பார்மென்ஸ் செய்து அசத்தியுள்ளார். இப்போ எல்லாம் குறும்படம், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு மொட்டைமாடியில் ஆட்டம் போட்டு பணத்தை சம்பாதிச்சிடுறீங்க போல என விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ:
View this post on Instagram