யுவதியை 10 முறை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்: பின்னர் நடந்த பகீர் சம்பவம்!!

814

இந்திய மாநிலம் குஜராத்தில் காதலை முறித்துக் கொண்ட இளம் பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜுனகத், தவுலத்பாரா பகுதியில் உள்ள பரபரப்பான காய்கறி சந்தை அருகாமையிலே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த தாக்குதலில் பாவ்னா சோனு கோஸ்வானி என்பவர், சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பாவ்னாவின் முன்னாள் காதலன் பிரவின் கோஸ்வாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலை முறித்துக் கொண்டு இன்னொருவருடன் பாவ்னா வாழ்ந்து வந்ததே பிரவின் கோஸ்வாமியை கொலைக்கு தூண்டியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருமணம் முடித்து கணவருடன் லாத்தி என்ற நகரில் குடியேறிய பாவ்னாவுடன் பிரவின் கோஸ்வாமிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ரகசியமாக காதலித்தும் வந்துள்ளனர். இதனிடையே பாவ்னா தமது கணவருடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து ஊருக்கு சென்ற நிலையில் பிரவின் கோஸ்வாமியை பாவ்னா கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுமார் 9 மாதம் முன்பு சோனு கோஸ்வானி என்பவருடன் பாவ்னா நெருக்கமானதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரியவந்த பிரவின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாவ்னாவை மிரட்டியுள்ளார்.

ஆனாலும் சோனு கோஸ்வானியும் பாவ்னாவும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரவின் பாவ்னா குடியிருக்கும் ஜுனகத் பகுதிக்கு சென்று தம்முடன் வர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பாவ்னா மறுக்கவே, காய்கறி சந்தையில் வைத்து தம்மிடம் இருந்த கத்தியால் பலமுறை தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் பொலிசார் வரும் வரை சடலத்தின் அருகாமையிலேயே காத்திருந்துள்ளார் என கூறப்படுகிறது. தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பொலிசார் பிரவின் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here