லண்டனில் விரைவில் முடிவுக்கு வரும் இலவச பயணம் திட்டம்! யாருக்கு எல்லாம் தெரியுமா? முக்கிய தகவல்!!

297

லண்டனில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இலவச பயண திட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் பிரித்தானிய அரசும் சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகரான லண்டன், இந்த தொற்று நோய் காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ஊரடங்கு காரணமாக கட்டண வருவாயில் 90 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து அமைப்பிற்கு அரசாங்கத்திடம் இருந்து 1.60 பில்லியன் டொலர் பிணை எடுப்பை தவிர வேறு வழியில்லை என்பதால், பிணை எடுப்புக்கான விதிமுறைகளில் ஒன்றான 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இலவச பயணத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


நிதி சிக்கல்கள் காரணமாக இலவச பயணம் நிறுத்தப்படுவதாக கூறப்பட்ட நிலையில், மே மாத இறுதியில், லண்டன் மேயர் சாதிக்கான் போக்குவரத்து செயலாளருக்கு 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இலவச பயணம் நிறுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சியில் ஒரு கடிதத்தை அனுப்பினார்.

அதில், ஏழைக் குழந்தைகளுக்கு தடைகளை உருவாக்கும், இலவச பயணத்திற்கான தடை BAME சமூகத்தில் ஏற்றத்தாழ்வான தாக்கத்தை ஏற்படுத்தும். லண்டனில் 18 வயதுக்குட்பட்ட மக்களில் 60 சதவீதத்தை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஆனால், இன்னும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இலவச பயணம் நிறுத்தப்படும் திகதி உறுதிப்படுத்தப்படவில்லை, ஏனெனில் அரசின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

லண்டன் மேயர் வலைத்தளம், இது குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் பள்ளிகளுக்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த திட்டம் எவ்வாறு முன்னேறும் என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், அந்த முடிவை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.