மோசமான வகையில் போட்டோஷாப் செய்யப்பட்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவியின் புகைப்படங்களை பலூனில் கட்டி பறக்கவிட்டு வடகொரியா மீதான தன் பகையை வெளிக்காட்டிக்கொண்டுள்ளது தென்கொரியா.
தென்கொரியாவின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் கிம். வட, தென் கொரிய அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக அலுவலகம் ஒன்றை எல்லைக்கருகில் வட கொரியாவில் கட்டியிருந்தார் கிம்.
இரு நாடுகளுக்கும் இடையில் உரசல் இருந்துகொண்டே இருந்த நிலையில், அந்த அலுவலகத்தை மூடிவிட இருப்பதாக எச்சரித்திருந்தார் அவர்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
ஆனால், தென்கொரியா, வடகொரிய அதிபரின் மனைவியையே மோசமாக சித்தரித்து படங்களை பலூனில் கட்டி விடவே, கடுமையான ஆத்திரம் ஏற்பட்டுள்ளது வடகொரிய அதிபருக்கு.
ஆகவே, இரு நாடுகளும் சமாதான பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்காக கட்டப்பட்ட அலுவலகத்தையே வெடிவைத்து தகர்க்க கட்டளையிட்டுவிட்டார் அவர்.
அதன்படி அந்த கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சியை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்..