வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் திறக்கப்பட்ட ஆய்வுகூடம்!!

511

வவுனியா மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடம் இன்று (21.10.2020) காலை திறந்து வைக்கப்பட்டது.

ஆய்வு கூடத்தினை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.மகேந்திரன் திறந்து வைத்துடன் ஆய்வு கூடத்தில் பாலும் காய்ச்சப்பட்டது.

இந் நிகழ்வில் வைத்தியர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.