வாடகையே கட்ட முடியல…. மின் கட்டணம் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது? தீயாய் பரவும் சேரனின் பதிவு!!

899

இயக்குனர் சேரன் அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

“தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. (கிராமங்களில் இருப்பவர்களுக்கும்) அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.”

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

“இதுபோன்ற காலக்கட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்படவேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது.

இதை எங்கே எப்படி கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அந்த துறை சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கவனிப்பார்களாக.


“வேலையின்றி வீட்டிற்கு உணவிற்கு தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில் இது போன்ற விசயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது.. வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும். இதுபோன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு” என சேரன் கூறி உள்ளார்.