விஜய் படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் – அக்‌ஷரா கவுடா!!

829

உயர்திரு 420 படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. அதன் பிறகு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் ஆரம்பம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

பின்னர் அதர்வாவின் இரும்புக் குதிரை, ஜெயம் ரவியின் போகன், ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற, சந்தீப் கிஷானின் மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக அக்‌ஷரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: எனக்கு துப்பாக்கி படத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம் விஜய், முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. மற்றபடி அந்த படத்தில் எனக்கு என்ன கதாபாத்திரம் கொடுத்திருந்தார்கள்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன், யாருடன் நடித்தேன் என்பதற்காக அல்ல. காஜல் அகர்வாலின் தோழியாக நடிக்க தான் என்னை அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் எனக்கு அது பற்றி எந்தவித கோபமும் இல்லை. இப்போதும் அவர்கள் கூப்பிட்டால் நான் நடிக்க தயாராக உள்ளேன், என கூறியுள்ளார்.