விவாகரத்து ஆனதை போட்டோ ஷூட் நடத்தி கொண்டாடிய பிரபல நடிகை.. ட்ரெண்டிங் ஆகும் புகைப்படங்கள்!!

12

ஷாலினி..

திரைத்துறையை பொறுத்தவரை பல வருடங்கள் காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்ட நட்சத்திரங்களே பல வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் திருமணம், வாழ்க்கை , விவாகரத்து எல்லாம் சாதாரண பிரச்சனை போல் மாறிவிட்டது.

தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாக சைத்தன்யா போன்ற பிரபல ஜோடிகளின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இருந்தாலும் அவர்கள் எல்லோரும் இருவருமாக சேர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு பின்னர் அதை பற்றி பெரிதுபடுத்திக்கொள்ளாமல் தங்களது வாழ்க்கையிலும் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு படி மேலே சென்றுள்ள பிரபல சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோ ஷூட்நடத்தி கொண்டாடியுள்ளார். அதில் கணவருடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படத்தை கிழிப்பது, காலில் போட்டு மிதத்தல் , மது அருந்தியபடி தனக்கு டைவர்ஸ் கிடைத்ததை மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. முள்ளும் மலரும் தொடர் மூலம் பாப்புலர் ஆன ஷாலினி சூப்பர் மாம் உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துக்கொண்டு இருக்கிறார். அவரது கணவர் ரியாஸ் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here