விவாகரத்து கொடு.. இல்லனா ஆபாச வீடியோவை லீக் பண்ணிடுவேன்.. மிரட்டிய கணவர்.. அதிர்ச்சியில் மனைவி!!

277

கர்நாடக…

கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கிரண் பாட்டீலுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.

இந்த நேரத்தில் எனது கணவர் எங்களுடைய அந்தரங்க நேரத்தில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்தார். இவற்றை எடுக்க வேண்டாம் என்று கேட்டபோது தனியாக ரசிக்க எடுத்ததாக கூறினார்.

இந்த நிலையில் அவர் என்னை வெறுக்க ஆரம்பித்தார். இவருக்கும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. மேலும் அவரை திருமணம் செய்ய விரும்பினார். இதனால் அடிக்கடி என்னிடம் சண்டை போட்டார். அவரும் இந்த விஷயத்திற்கு சம்மதிக்க தினமும் விவாகரத்து கேட்டு என்னிடம் சித்ரவதை செய்தார்.

ஆனால் நான் உன்னை நம்பி வந்ததால் என்னால் விவாகரத்து பெற முடியாது என்று சொன்னேன். இதன் காரணமாக அவர் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


மேலும், இந்த விவகாரத்து கொடுத்தே ஆக வேண்டும் எனவும் மிரட்டத் தொடங்கினார். அப்படி தராவிட்டால், என்னுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டத் தொடங்கினார். இதனால் ஆபாச வீடியோ மூலம் என்னை மிரட்டும் கணவர் கிரண் பாட்டீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரை விசாரித்த போலீசார் கிரண் பாட்டீலை பெலகாவியில் கைது செய்தனர். பின்னர் அவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், குணமடைந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.

பெலகாவி சைபர் கிரைம் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்டு மனைவியின் ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என கணவர் மிரட்டிய சம்பவம் பெலகாவி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.