30 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகன்களுடன் சேர்ந்து தனது கணவரை மனைவி கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பஞ்சாபி சிங் (39). இவர், தனது தாய் மற்றும் 2 சகோதரர்கள் இணைந்து 30 வருடங்களுக்கு முன்பு தந்தையை கொலை செய்ததாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இவருக்கு, பிரதீப்குமார், முகேஷ்குமார் என்ற 2 சகோரர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் கடந்த ஜூலை 1 -ம் திகதி அன்று பஞ்சாபி சிங்கிற்கு பண தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, இருவரும் பஞ்சாபி சிங்கை மிரட்டியுள்ளனர். அதாவது, 1994 -ம் ஆண்டில் தந்தையை கொலை செய்தது போலவே உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனை கேட்டதும் பஞ்சாபி சிங்கிற்கு தான் சிறு வயதாக இருக்கும்போது தனது தாய் ஊர்மிளாதேவி, சகோரர்கள் பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் தந்தையை கொலை செய்தது நினைவுக்கு வந்துள்ளது.
அதாவது, 1994 -ம் ஆண்டில் தாய் ஊர்மிளாதேவிக்கு செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது கணவர் ஊர்மிளா தேவியை கண்டித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற நாளில் பஞ்சாபிசிங்கையும், அவரது இளையசகோதரரையும் ஊர்மிளாதேவி பக்கத்து வீட்டிற்கு சென்று தூங்குமாறு அனுப்பி உள்ளார்.
ஆனால், நள்ளிரவில் தூக்கம் வராமல் பஞ்சாபி சிங் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தாயும், 2 சகோதரர்கள் இணைந்து தனது தந்தையை கொலை செய்து வீட்டு முற்றத்தில் புதைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, இதுபற்றி வெளியில் சொல்ல கூடாது என்று பஞ்சாபி சிங்கிடம் தாய் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது சகோதரர்களுக்கிடையே பணத்தகராறு ஏற்பட்ட நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் ஹத்ராஸில் உள்ள வீட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட இடத்தை தோண்டிய போது மனித எலும்பு கூட்டை கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.