வீட்டில் இருந்த 21 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

350

இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்தவர் கங்கா குமார். இவர் மனைவி சரோஜ் (21).

சரோஜ் 8 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் தினக்கூலி வேலை செய்து வந்த குமார் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் இருந்தார்.

இதனால் வீட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக குமார் – சரோஜ் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இது தொடர்பாக நேற்று முன் தினமும் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் சரோஜை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு குமார் அங்கிருந்து ஓடிவிட்டார்.

பின்னர் இரத்த வெள்ளத்தில் கிடந்த சரோஜ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் கருவில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டது, இதனிடையில் சரோஜின் பிரேத பரிசோதனையில் அவரின் வயிறு, முதுகு பகுதியில் சரமாரியாக கத்திக்குத்து பட்டதும் அதனாலேயே அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் இதன் காரணமாகவே வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததும் உறுதியானது.

தப்பியோடிய குமாரின் பைக் அங்குள்ள ஆற்றின் அருகில் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் குமார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் அவர் சடலம் கிடைத்தால் தான் இது குறித்து உறுதிப்படுத்த முடியும் என பொலிசார் கூறியுள்ளனர்.

கர்ப்பிணி பெண் கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here