வீட்டில் தனியே இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

114

திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை நகைகளுக்காக கழுத்தறுத்துக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகநாதன் ( 50).

இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நாகநாதன் புருனே நாட்டில் பணிபுரிந்து வருவதால், பிரபாவதி வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும், வீட்டை விட்டு பிரபாவதி வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.

வீட்டின் திறந்த நிலையில் இருந்துள்ள நிலையில், வீட்டிற்குள் பிரபாவதி ரத்த வெள்ளத்தில் ஆடைகளின்றி சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாவதியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரபாவதி தலையில் கத்தியால் குத்துப்பட்டும் கழுத்தறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பிரபாவதி அணிந்திருந்த நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.


தொடர்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரபாவதியின் நகைகளை கொள்ளையடித்ததோடு அவரை பாலியல் வன்கொடுமையும் செய்து கொலைச் செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.