வெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்த IAS தம்பதியினர் வைரலாகும் புகைப்படம்!!

198

IAS தம்பதியினர் ஒருவர் தங்களுடைய திருமணத்தை வெறும் 500 ரூபாயில் முடித்துக் கொண்ட நிகழ்வு பேசப்பட்டு வருகிறது.

வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் திருமணத்தை அனைவரும் புகழ்ந்து பேசும்படி நடத்த வேண்டும் என்பது தான் பலரது எண்ணமாக இருக்கும். அதுவும், கடன் வாங்கியாவது பெரிய நிகழ்வாக சிலர் நடத்துகிறார்கள்.

திருமணத்திற்கு செய்யப்படும் செலவு தற்போதைய காலத்தில் மிகவும் அதிகமாக மாறிவிட்டது. கோடிகளில் செலவு செய்து திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர்.

ஆனால், இதற்கெல்லாம் மாற்றாக தம்பதியினர் ஒருவர் மிக குறைந்த செலவில் தங்களுடைய திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

500 ரூபாயில் திருமணம்

இந்தியாவின் உயர்நிலை பதவியான ஐ.ஏ.எஸ். பதவியில் இருக்கும் தம்பதியினர் தான் மிக எளிமையான முறையிலும், குறைந்த செலவிலும் திருமணத்தை முடித்துள்ளனர்.


ராஜஸ்தானில் உள்ள அல்வாரைச் சேர்ந்தவர் ஆஷிஷ் வசிஷ்ட். பஞ்சாபின் ஜலாலாபாத்தைச் சேர்ந்தவர் சலோனி சிதானா. இவர்கள் இருவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆவர்.

இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கேயே தங்களது திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

இவர்கள், தங்களது குடும்பத்தினரை திருமணம் பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு, ரூ.500 பதிவு கட்டணம் மட்டும் செலுத்தி எளிமையாக திருமணம் நடத்தி முடித்தனர். மாலையை ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டதும் திருமண சடங்குகள் முடிந்தன.

மேலும், திருமணத்திற்காக இருவரும் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்துக் கொண்டனர். மூன்றாவது நாள் இருவரும் பணிக்கு திரும்பிவிட்டனர். இவர்களின் திருமணம் 2016 -ம் ஆண்டில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த தகவல் பரவி வருகிறது.