வெளிநாட்டில் இந்தியரை அவமானப்படுத்திய நபரை கன்னம் வீங்க அடி கொடுத்த தமிழன்! வீரத்தமிழனின் தரமான சம்பவம்!!

607

மலேசியாவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இந்தியரை திட்டியதுடன், எச்சில் துப்பிய நபரை தமிழகத்தை சேர்ந்த நபர் அழைத்து அடித்து வெளுத்து வாங்கிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக, பலரும் தங்கள் குடும்பத்தை விட்டு வேறொரு நாட்டிற்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.

அங்கு வேலை செய்யும் இடத்தில் பார்க்காத அவமானம் இல்லை, கண்டவன் எல்லாம் திட்டுவான் என்று வெளிநாட்டிற்கு வேலை சென்று வருபவர்கள் கூறுவர்.

அப்படி அதை நிரூபிக்கும் வகையில் மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் தோட்ட வேலை பார்த்து வரும் இந்தியரை,

இந்தோனேஷியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர், அவரை அழைத்து சத்தம் போட்டு மிரட்டியதுடன், அசிங்கப்படுத்தும் வகையில் அவர் மீது எச்சிலையும் துப்பினான்.

இதைக் கண்ட அந்த வழியே சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நபர், அந்த இந்தோனேஷிய இளைஞனை அழைத்து, அவனுடைய மொழியிலே எதற்கு அவரை அடித்தார் என்று பேசுகிறார். அதன் பின் அந்த இந்தோனேஷிய இளைஞனின் கன்னம் பழுக்க அடுத்து அடுத்து அடிக்கிறார்.

அதன் பின் அந்த தமிழன், குறித்த இந்தியரிடம் சென்று நீங்கள் என்ன தமிழ்நாடா? என்று கேட்கிறார். உடனே அவர் தமிழே இல்லை நான் ஆந்திரா என்று கூறுகிறார். அவன் என்ன செய்தான் என்ற போது? உரிமையாளரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி, எச்சில் துப்பியதாக கூறுகிறார்.

உடனே இவர் அப்போ நாம் இந்தியர், இப்படியெல்லாம் விடாதீங்க, நம்ம உரிமையை விட்டு ஒன்றும் இருக்க வேண்டாம் தைரியமாக ஒன்று கொடுத்துவிடுங்க என்று கூறுகிறார்.

ஒரு சம்பவம் கண்முன் நடந்தால் நமக்கு என்ன என்று செல்லும் இந்த காலத்தில், அதுவும் வெளிநாட்டில் தமிழன் ஒருவன் தனி ஒருவனாக அந்த நபரிடம் அறிவுரை கூறி, எப்படி கூறினான் கேட்பான் என்று கன்னம் வீங்க அடி போட்டது, அவன் வீரத்தமிழன் என்பதை நிரூபித்துவிட்டான் என்று இணையவாசிகள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here