வெளிநாட்டில் கணவன்… லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய இளம்பெண்.. தாயிடமும் சொல்லாமல் தப்பியோடிய கொடுமை!!

136

கன்னியாகுமாரியில்..

கன்னியாகுமாரி தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ, இவரது மனைவி அஜி(வயது32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இதனால் அஜி, தனது குழந்தைகளுடன் ஊரில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தோழி வீட்டுக்கு செவ்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஜி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்பு வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

குழந்தைகளுடன் தனது மகள் மாயமானது குறித்து கொற்றிகோடு காவல் நிலையத்தில் தாய் பிரேமா புகார் செய்தார். அதன்பேரில் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அறி கொற்றிக்கோடு மற்றும் தக்கலை பகுதியில் பலரிடம் நகை-பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றி சென்றதாக பலர் புகார் கொடுத்தனர். அந்த புகாரை பெற்றுக்கொண்ட கொற்றிக்கோடு காவல்துறையினர், அஜியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அவர் கேரள மாநிலம் பாரசாலை பகுதியில் தங்கியி ருப்பதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் தக்கலை இன்ஸ்பெக்டர் ராம சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந் தனர்.

அவர்கள் செல்வதற்கு முன்பாகவே, புகார் கொடுத்தவர்கள் பாறசாலைக்கு சென்று அஜி தங்கியிருந்த விட்டை சுற்றி வளைத்தனர். உடனே பாற சாலை காவல்துறையினர் அஜியை மீட்டு விசாரணை நடத்தி கொற்றிகோடு போலிசாரிடம் ஒப்படைத்தனர்.