ஸ்கூல் ரூமில் வைத்து கண்ட இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர்!!

232

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணையில் கிரீன் பேரடைஸ் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இப்பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் தனது அறைக்கு அழைத்து சென்று 10ம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதப்படுத்தி வந்தனர்.


இதனையடுத்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி முதல்வர் கார்த்திகேயனை தேடிவந்த நிலையில் இன்று போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.