ஸ்மார்ட்போன் பரிசளித்த கணவருக்கு டாட்டா காட்டிய மனைவி.. காதலனுடன் ஓட்டம்!!

49

பீகாரில்..

பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான மூன்று குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்து அவரிடம் ஸ்மார்ட்போன் வாங்கித் தரும்படி கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து, ரூ.20,000 மதிப்புள்ள புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி சமீபத்தில் தனது மனைவிக்கு பரிசளித்துள்ளார்.

அதேசமயம், புலம்பெயர்ந்த தொழிலாளியாக நேபாளத்தில் அவர் பணிபுரிந்து வருவதால், தனது வேலைக்காக அங்கு சென்று விட்டார். சிறிது நாட்கள் கழித்து தனது மனைவியை அவர் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

பலமுறை அழைத்தும் தொடர்ந்து சுவிட்ச் ஆப் என வந்ததால், சந்தேகமடைந்த அவர், தனது கிராமத்தில் உள்ள பக்கத்து வீட்டுக்காரரைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.  அப்போதுதான், தனது மனைவி அவரது காதலுடன் ஓடி விட்டார் என்ற அதிர்ச்சிகர தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமர்பூர் காவல்துறையிடம் அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவரது மனைவி மேஜர் என்பதால், சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. எனவே, புகாரை விசாரித்து வருவதாக அமர்பூர் காவல் ஆய்வாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.