ஹீரோயினை அங்கு ந*** சொல்லுறாங்க.. திடீரென டென்ஷனான RJ பாலாஜி!!

87

RJ பாலாஜி…

சந்தீப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது.

அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்துள்ளது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் நல்ல வசூல் குவிந்து வருகிறது. தற்போது, வரை இப்படம் ரூ.1052.85 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வசூல் மேலும், அதிகரித்து பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட் பதிக்கலாம் என நம்பமுடிகிறது. இதனால் இனிவரும் ரன்பீர் கபூர் படங்கள் பாலிவுட் ஸ்டார் நடிகர்களையே நடுங்க வைக்கும் என பேசிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி அனிமல் படம் குறித்து பேசி உள்ளார். அதில், பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் சரி சமமாக வளர்க்க வேண்டும். அவர்கள் இருவரையும் ஒரே மாதிரி நடத்தவேண்டும். உதாரணத்திற்கு என் வீட்டில் என்னுடைய தாத்தா எல்லா வேலைகளையும் செய்வார். அவர் இல்லை என்றால் நான் செய்வேன். அப்படி இருக்கும் எனக்கே என் மனைவி தொடர்ந்து 4 நாட்கள் சமைக்கவில்லை என்றால் கடுமையாக கோபம் வரும். என்னை போலவே அவளும் வேளைக்கு சென்று வருகிறார்கள்.


எனவே நான் செய்வது தவறு என்று எனக்கே தெரியும். பின்னர் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு செயல்படுவேன். அப்படி சென்றுக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை நியாயம் என்பது போல் படம் எடுத்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனத்தில் விஷத்தை வளர்த்து விடுகிறது இந்த சினிமா. நான் அனிமல் படத்தை பார்க்கவில்லை. அந்த படத்தில் பெண்களை அடித்து துன்புறுத்துவது, ஷூ எல்லாம் நக்கச் சொல்வது போன்ற காட்சிகள் இருந்ததாக கேள்விப்பட்டேன்.

அப்படிப்பட்ட படங்களையும் தியேட்டருக்குள் ஒரு கூட்டம் ரசித்து பார்ப்பதை என்னால் பார்க்க முடியாது. இந்த மாதிரியான காட்சிகளை ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நானும் என்னுடைய படத்தில் அப்படியான காட்சிகளை வைத்து விட்டால் நல்லாவா இருக்கும் என்று ஆர்.ஜே பாலாஜி கேள்வி எழுப்பியும், இது போன்ற திரைப்படங்கள் சமூதாய சீர்கேட்டை வளர்கிறது என அனிமல் திரைப்படத்தை மோசமாக ஆர்ஜே பாலாஜி விமர்சித்துள்ளார்.