அக்காவுடன் தகாத உறவு.. கண்டித்தும் கேட்காத ஆருயிர் தோழன்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

124

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரபு. கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில், அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார்.

உடனே வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பிரபுவின் நண்பரான அதே ஊரைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, மாயாண்டி பிரபுவும் நானும் நெருங்கிய நண்பர்கள்.

அதனால், குடும்பத்தில் ஒருவராக நினைத்து வீட்டுக்கும் அழைத்துச் சென்று குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். ஆனால், என் அக்காவுடன் பிரபுவுக்குத் தகாத உறவு ஏற்பட்டிருக்கிறது. அதைக் கண்டித்தேன். ஆனால், பிரபு கேட்கவில்லை.


அதனால் என் அக்காள் மகன் (சிறுவன்) மற்றும் என்னுடைய நண்பர் சிவாவுடன் சேர்ந்து பிரபுவைக் கொலைசெய்தேன்” எனத் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.