இன்றைய ராசிபலன் (06.06.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

237

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வருமானம் சராசரியாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலர் கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கடும் உழைப்பால் வெற்றி கிடைக்கும். கொஞ்சம் முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறவுகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு புதிய மனிதர்களின் அறிமுகத்தால் கை நிறைய பணம் சேரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. சிலர் பணத்தை இழக்க கூடும். வார்த்தைகளை கோபத்தில் அனாவசியமாக விட கூடாது. திருமணம் கைகூடி வரும். சிலர் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பு அமையும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கப் போகின்றது. வேலையில் இட மாற்றம், சம்பள உயர்வோடு கிடைக்கலாம். சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் சிலருக்கு உண்டு. சொந்த தொழிலில் வியாபாரம் நல்லபடியாக நடந்தாலும், போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகரமான தினமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய வேலை, தொழில் தொடங்கலாம். வெளியிடங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை. எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பாத்தப்பட்ட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது‌.பணம் தண்ணீராக செலவாகும். செலவை கட்டுப்படுத்துங்கள். சொத்து சுகம் வாங்குவதற்கான யோகம் உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் ஏற்படும். நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் கஷ்டம் வந்தாலும், அடுத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில் சிறப்பாக நடக்கும். தடைபட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைகளை எல்லாம் கூட நிறைவேறும். எந்தவித தடங்களும் ஏற்படாது. புதியதாக சொத்து சுகம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் நாசுக்காக பேசி, நாசுக்காக நடந்து கொள்ளுங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிரமங்கள் ஏற்படக்கூடும். வீண் அலைச்சல் ஏற்படும். நீண்ட தூரம் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது. உங்களுடைய வேலை அடுத்தவர்களிடம் ஒப்படைக்காதீங்க. உங்களுக்கு கெட்ட பெயர் வந்துவிடும். பணவரவு சீராக இருக்கும். கடன் பிரச்சினை படிப்படியாக குறையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று படிப்படியாக பிரச்சனைகள் குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக யாரையும் எதிர்த்து பேசாதீங்க. சில பேர் குடும்பத்தை விட்டு, வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். வேலைக்காக தான். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று அனுபவரீதியாக நிறைய பாடம் கிடைக்கும். வாழ்க்கையில்இனிமேலாவது செய்த தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளுக்கு சவால் விடுவீர்கள். உங்களை வீழ்த்த யாராலும் முடியாது. செலவுகளை சரி செய்யும் அளவுக்கு வருமானம் கிடைக்கும்.