இன்றைய ராசிபலன் (20.05.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

955

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் நன்மைகள் ஏற்படும் நாளாக அமையும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம், சகோதர வழியில் பொருள்வரவு இருக்கும். பழைய கடன்களை அடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கும். முயற்சிகளில் தாமதங்கள் ஏற்பட்ட பிறகு வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் மனோ தைரியம் அதிகரிக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெறுவீர்கள். நீண்ட நாள் கடன் பிரச்சனை தீரும். புதிய மனிதர்கள் நட்பு ஏற்படும்.

கடகம்

கடக ராசியினர் இன்றைய தினம் எதிலும் அனுசரித்து செல்ல வேண்டும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் கடுமையான போட்டிகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அவசர தேவைக்காக சிலர் கடன் வாங்கும் நிலை ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் நேர்மையான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியினர் இன்றைய தினம் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் கடுமையாக போராடி வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ரீதியான உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும். உறவினர்கள் வழியில் தனவரவு உண்டாகும். சிலர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வார்கள். குடும்பத்திற்கான ஆடம்பர செலவுகளை செய்வார்கள்.

துலாம்

துலாம் ராசியினர் இன்றைய தினம் எதிலும் துணிந்து ஈடுபடுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே அன்னியோன்யம் கூடும். பழைய நண்பர்கள் உதவி செய்வார்கள். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

விருச்சிகம்

விருச்சக ராசியினர் இன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். ஈடுபடும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் உதவிகள் இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆதரவு இருக்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முதலீடுகளில் ஈடுபடக் கூடாது. யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். பெண்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். மனதில் வீண் கவலைகள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மகரம்

மகர ராசியினர் இன்றைய தினம் தங்களின் திறமையால் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். வெளிநாடு செல்ல முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியினர் இன்றைய தினம் எதிர்பாரா யோகம் பெறுவார்கள். கோர்ட் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். அரசாங்க ரீதியான உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் உங்கள் பேச்சுத் திறமையால் சிறப்பான பலன் பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசியினர் இன்றைய தினம் பல புதுமைகளைப் படைப்பீர்கள். பணியிடங்களில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனைவி வழியில் சிலருக்கு பொருள் வரவு இருக்கும்.