இன்றைய ராசிபலன் (23.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1064

இன்றைய ராசிபலன்…

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவை சாப்பிடுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தொழிலில் பெருசாக முதலீடு செய்ய வேண்டாம். பெரிய அளவில் பண பரிமாற்றம் செய்ய வேண்டாம். மற்றபடி குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள்.

ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களே உங்களை சுறுசுறுப்பாக இருக்கவும் செய்யும். மனதில் நிம்மதி இருக்கும். இரவு நல்ல தூக்கம் வரும். சொந்த தொழிலில் எதிர்பார்த்ததை விட நிறைய வருமானம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மன நிறைவோடு வேலையை செய்து முடிப்பீர்கள். பிரச்சனைகள் இல்லாத இந்த நன்னாளில் குலதெய்வத்துக்கு நன்றி சொல்லுங்க.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் என்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கடைகளில் சாப்பிட வேண்டாம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால் மருத்துவரை அணுகவும். வேலையில் சின்ன பின்னடைவு ஏற்படும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். சொந்தத்தொழிலில் பாட்னரை முழுமையாக நம்ப வேண்டாம். கணக்குகளை, முதலீடு செய்தவரே சரிபார்க்கும் போது தான் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு என்று லாபகரமான நாளாக அமையும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் பெயரும் புகழும் கிடைக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். விவசாயிகளுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வர வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும். உறவினர்களை உதாசீனப்படுத்த கூடாது. மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. எல்லோரிடத்திலும் பணிவாக நடந்து கொள்வது நன்மையை தரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்போடு திறமையாக வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்‌ புதுசாக அழகு சாதன பொருளை வாங்கி வாழ்க்கை துணைக்கு பரிசளித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நபர்களின் நட்பு லாபத்தை கொடுக்கும். பெரிய மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு காரணமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப காரிய விசேஷங்களை பற்றிய பேச்சுகள் தொடங்கும். புரட்டாசி முடிந்ததும் கெட்டிமேல சத்தம் கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகளால் மன நிறைவு உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மகிழ்ச்சியான இந்த தருணத்தில் உங்களுடைய வேலைகளையும் கவனத்தோடு செய்ய வேண்டும். வேலைகளில் கவனம் இல்லை என்றால் நிதிநிலைமை மோசமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் கொஞ்சம் கூடுதல் அக்கறை காட்டுங்க.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் என்று கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. நண்பர்களாக இருந்தால் கூட அவர்களை முழுசா நம்பாதீங்க. குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புது மனிதர்களிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களை இன்று யாராவது ஒருவர் ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்பவும் பிசியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலையை முதலில் செய்வது எந்த வேலையை அடுத்து செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். ஆனால் இந்த நாள் இறுதியில் மனநிறைவோடு எல்லா வேலையையும் செய்து முடித்திருப்பீர்கள். உடல் அசதி இருக்கும். ஆரோக்கியமான உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை சாப்பிடுவது நன்மையை தரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். மனது தெளிவாக இருக்காது. முக்கியமான விஷயத்தில் முடிவு எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். வாழ்க்கை துணை சொல்லுவதை கேட்டு நடக்க வேண்டும். மூன்றாவது மனிதர்களை நம்பக் கூடாது. சொந்த தொழிலில் அதிக அக்கறை தேவை. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து செல்லவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்று எண்ணங்கள் எதிர்மறையாக இருக்கும். சில குழப்பமான பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்வீர்கள். இதனால் செய்யும் வேலையில் கவனம் இருக்காது. சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எண்ணத்தை தெளிவுபடுத்த இஷ்ட தெய்வத்தின் நாமத்தை நாள் முழுவதும் மனதிற்குள் உச்சரிக்க வேண்டும்.