இன்றைய ராசிபலன் (26-01-2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

573

இன்றைய ராசிபலன்…

மேஷம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களால் பிரச்னை வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்


குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிக்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு பெருகும். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களிடம் நெருடல்கள் வந்து நீங்கும்.யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார். கவனம் தேவைப்படும் நாள்.

கன்னி

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலைஉயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடிவருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைகூடும். அமோகமான நாள்.

விருச்சிகம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது பங்குதாரர் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னைகளுக்குச் சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள்.

கும்பம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். விலகிச்சென்ற உறவினர்கள் வலியவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.