இன்றைய ராசிபலன் (26.05.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1349

இன்றைய ராசிபலன்….

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

ரிஷபம்:


ரிஷப ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தாரின் முழு ஆதரவு இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசியினர் இன்றைய தினம் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். சிலருக்கு நாள் முழுவதும் படபடப்பான மனநிலை இருக்கும். சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு நீங்கும். பொருள் வரவு சராசரியான அளவில் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி போட வேண்டும்.

கடகம்:

கடக ராசியினர் இன்றைய தினம் வெளியில் கிடைக்கும் உணவுகளை உண்ணக்கூடாது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரங்களில் மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் குடும்பத்திற்கான ஆடம்பர செலவுகளை செய்வார்கள்.

கன்னி:

கன்னி ராசியினர் இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பகைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள். சிலர் புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் ஆசிகள் உண்டு.

துலாம்:

துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விரும்பிய பணியிட மாறுதல் பெறுவார்கள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை பெருகும். கலைஞர்களுக்கு புகழ், பொருள் பெற்று தரும் வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் மனோ திடம் அதிகரிக்கும். எத்தகைய சவால்களையும் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பார்கள் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரிந்த உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.

தனுசு:

தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உடல்நலத்தில் அக்கறை தேவை. வீணான கவலைகள் மனதில் தோன்றும். தொழில், வியாபாரங்களில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது எச்சரிக்கை தேவை.

மகரம்:

மகர ராசியினருக்கு இன்றைய தினம் அமோகமான நாளாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிக லாபத்தை பெறுவார்கள். உடல், மனம் உற்சாகமாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் கனவுகள் அனைத்தும் நனவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரியங்களில் துணிந்து ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.

மீனம்:

மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பால் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாரா பொருள் வரவு இருக்கும். சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.