இன்றைய ராசிபலன் (27-01-2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

412

இன்றைய ராசிபலன்…

மேஷம்

எதிர்பார்த்த வேலை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்


சமயோஜித புத்தியால் எல்லா பிரச்சினைகளையும் எளிதாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்பு கூடும் நாள்.

மிதுனம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்டநாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவரச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்து விடுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால்வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். தைரியமான முடிவுகள் எடுக்கும் நாள்.

கும்பம்

இதுவரை இருந்த சோர்வுநீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகு இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். சாதாரணமாகப் பேசுவதை கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வீடு வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.